கருவேலி, திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு

திருப்பணி

திருப்பணி விவரங்கள்

திருப்பணி என்பது 12 வருடங்களுக்கு ஒரு முறை செய்யப்படும் புனித கும்ப அபிஷேகமாகும். இதனை குடமுழுக்கு என்றும் சொல்வர். இந்த நிகழ்வென்பது ஆலயத்தின் அனைத்து விக்ரகங்கள் மற்றும் கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்விக்கப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க மந்திர முழக்கத்துடன் நடைபெறும் ஒரு உன்னதமான திருவிழா.

இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு புது மெருகு ஊட்டப்படுகிறது.