கருவேலி, திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு

ஸ்ரீ ஸற்குணேஸ்வரர்

ஸ்ரீ சர்வாங்க சுந்தரி சமேத ஸ்ரீ ஸற்குணேஸ்வரர் ஆலயம்

கொட்டிட்டைக் கருவிலி கும்பாபிஷேஹம்!

நான் திருமணம் ஆகி வந்த சமயம் கோயிலுக்குச் செல்பவர்களே யாரும் இல்லை! தினம் தினம் குருக்கள் மட்டும் தன் கடமையைத் தவறாது காலை, மாலை இருவேளைகளும் செய்து கொண்டு வந்தார். அப்போதெல்லாம் கோயிலில் சப்தமே இல்லாமல் அமைதியாக இருப்பது கொஞ்சம் அச்சத்தைத் தரும்.

read more

திருநாவுக்கரசர் தேவாரம்

திருநாவுக்கரசு நாயனார் அருளிச் செய்த தேவாரம் ஐந்தாம் திருமுறை தளத்தின் பெயர் - கருவிலி; ஆலயத்தின் பெயர் - கொட்டிட்டை; பாடல்: மட்டிட் டகுழ லார்சூழ லில்வலைப் பட்டிட் டுமயங் கிப்பரி யாதுநீர் கட்டிட் டவினை போகக் கருவிலிக் கொட்டிட் டையுறை வான்கழல் கூடுமே. பொழிப்புரை:...

read more

திருக்கருவிலிக் கொட்டிட்டைக்கு வருக! அருள் பெறுக!

ஸ்ரீ சர்வாங்க சுந்தரி சமேத சர்குணேஸ்வரர் ஆலயம் கருவேலி என்று பரவலாக அழைக்கப்படும் சர்குணேஸ்வரபுரம் கிராமத்தில் காவிரியின் கிளையான அரசலாற்றங்கரையின் கரையில் அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான வருடங்களின் அற்புதமான வரலாற்றுக்கு சொந்தமான இக்கோயில் தமிழ் சைவக்குரவர் திருநாவுக்கரசர் இயற்றிய ‘பதிகம் பத்து’ நூலில் ‘திருக்கருவிலிக் கொட்டிட்டை’ என்று புகழப்பட்டுள்ளது.

ராஜேந்திர சோழன் காலகட்டத்தில் இக்கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டது. சில நூறு வருடங்களுக்கு முன் வரை பராமரிப்பின்றி இருந்த இக்கோயில் 1997ம் வருடம் பல கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு சீரும் சிறப்புமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆலய வரலாறு

நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் பாடிய தலம்  என அறிந்த வரலாறு சொல்கிறது

படத்தொகுப்பு

கருவேலி ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாக்கள், நிகழ்ச்சிகளின் ஒளி/ஒலி தொகுப்பு

ஆலயம் அடையும் வழி

கருவேலி ஆலயம், கோயில் நகரம் குடந்தையிலிருந்து 22 கி.மீ. தூரத்தில் உள்ளது